» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!

திங்கள் 8, செப்டம்பர் 2025 5:19:09 PM (IST)



உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் விண்ணப்பித்த மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (08.09.2025) நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.

இக்கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கையின் தன்மைக்கேற்ப மனுக்கள் பதிவு செய்யப்பட்டதோடு, அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும் பொது பிரச்சனைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து மனுக்களை பரிசீலனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், ஒவ்வொரு வாரமும் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கோரிக்கை மனுக்கள் அளிக்க வரும் பயனாளிகளுக்கு மனுக்கள் பரிசீலனை செய்து, உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி மனுக்களுக்கு கேட்கும் உபகரணங்கள் தயார் நிலையில் இருக்கும் உபகரணங்களை பொறுத்து திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மடக்கு சக்கர நாற்காலி கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.13,500/- மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலி இரண்டு பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்.

இந்நிகழ்வில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ஜெயா, தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையர் மகாலெட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜா.ராஜசெல்வி, மாவட்ட வழங்கல் அலுவலர் பாக்கியலெட்சுமி உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory