» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவில்பட்டி மேற்கு நிலையத்திற்கு முதல்வர் விருது : தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் வாழ்த்து!

திங்கள் 8, செப்டம்பர் 2025 4:40:33 PM (IST)



தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது" பெற்ற கோவில்பட்டி மேற்கு நிலைய காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு மாவட்ட/மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையங்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து "தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு" வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு, காவல் நிலையம் சார்பாக அதற்கான விருதை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் கடந்த 06.09.2025 அன்று சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் வைத்து காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களிடம் "தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருதை பெற்றார்.

மேற்படி விருது பெற்ற கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தின் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் உட்பட சார்பு ஆய்வாளர்களை இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டி எப்போதும் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்தினார். இந்நிகழ்வின்போது கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் உடனிருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory