» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ரயில் நிலையம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை : நெல்லையில் பயங்கரம்!!
சனி 6, செப்டம்பர் 2025 10:50:31 AM (IST)
நெல்லையில் ரயில் நிலையம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை டவுன் சுந்தரர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் என்கிற ஆனந்த் (19). இவர், அப்பகுதியில் தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது 4 நண்பர்களுடன் நேற்றிரவு நெல்லை ரயில் நிலையம் முன்பு அமைந்துள்ள டீக்கடைக்கு வந்துள்ளனர்.
அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த மர்ம நபர்கள் சிலருக்கும் இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் வெங்கடேஷை ஓடஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பினர்.
உடனடியாக அப்பகுதியில் இருந்த காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் பிரசன்ன குமார் தலைமையிலான காவலர்கள் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மேலும், கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் கொலையான வெங்கடேஷ் உடன் வந்த நண்பர்கள் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில் கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்லை டவுன் பகுதியில் நடந்த கொலை தொடர்பாக வெங்கடேஷ் மீது வழக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு பழி வாங்குவதற்காக கொலை நடந்ததா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பஸ்சில் பெண்ணிடம் நகை திருடிய தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவி கைது
ஞாயிறு 7, செப்டம்பர் 2025 9:38:19 AM (IST)

நெல்லையில் ரூ.71 கோடியில் புதிய விண்கல கட்டுப்பாட்டு மையம்: இஸ்ரோ திட்டம்
ஞாயிறு 7, செப்டம்பர் 2025 9:35:47 AM (IST)

திருச்செந்தூரில் கடல் 80 அடி தூரம் உள்வாங்கியது
ஞாயிறு 7, செப்டம்பர் 2025 9:09:58 AM (IST)

செங்கோட்டையனை நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சம்: ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
சனி 6, செப்டம்பர் 2025 5:56:51 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பிரேக்கிங் தரிசன முறை: வாபஸ் பெற இந்து முன்னணி வலியுறுத்தல்!
சனி 6, செப்டம்பர் 2025 5:26:52 PM (IST)

கல்லிடைக்குறிச்சியில் அரபி மதரஸா ஆண்டு விழா
சனி 6, செப்டம்பர் 2025 4:47:49 PM (IST)
