» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அஜித்குமாரை போல 24 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அளிக்காதது ஏன்? விஜய் கேள்வி
ஞாயிறு 13, ஜூலை 2025 6:38:22 PM (IST)

அஜித்குமாரை போல காவல் மரணமடைந்த 24 பேரின் குடும்பங்களுக்கு திமுக அரசு நிவாரண நிதி அளிக்காதது ஏன்? என்று விஜய் கேள்வி எழுப்பினார்.
சிவகங்கை மாவட்டம் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அக்கட்சியில் தலைவர் விஜய் கருப்பு நிற உடை அணிந்து, பதாகையை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றார். நீதி வேண்டும், நீதி வேண்டும், அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று த.வெ.க.வினர் முழக்கமிட்டனர்.
இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: தி.மு.க. ஆட்சியில் காவல்துறையால் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேரின் குடும்பத்தினருடன் முதலமைச்சர் மன்னிப்பு கேட்பாரா? திருப்புவனம் அஜித்தை தவிர லாக்அப் மரணமடைந்த 24 பேரின் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் sorry சொல்லாதது ஏன்?
அஜித்குமாரை போல காவல் மரணமடைந்த 24 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அளிக்காதது ஏன்? தி.மு.க. அரசு இப்போது sorry-மா மாடல் அரசாக மாறிவிட்டது இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக - பாஜக கூட்டணிக்கு டெபாசிட் கூட கிடைக்காது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு
ஞாயிறு 13, ஜூலை 2025 6:30:36 PM (IST)

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்
ஞாயிறு 13, ஜூலை 2025 11:05:42 AM (IST)

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

காவல் நிலையத்தில் பெண் தற்கொலை முயற்சி : தூத்துக்குடியில் பரபரப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 8:09:20 AM (IST)

மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 25-ம் தேதி கமல்ஹாசன் பதவி ஏற்பு!
சனி 12, ஜூலை 2025 5:16:32 PM (IST)

குரூப் 4 தேர்வு வினாத்தாள் எதுவும் கசியவில்லை: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் பேட்டி
சனி 12, ஜூலை 2025 4:41:25 PM (IST)
