» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சாலை, மேம்பாலப் பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!!
திங்கள் 7, ஜூலை 2025 4:43:39 PM (IST)
தமிழ்நாடு முழுவதும் சாலை மற்றும் மேம்பாலப் பணிகளை மேற்கொள்ள ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த அரசாணையில்,”கோவையில் ரூ.348 கோடி செலவில் 12.5 கி.மீ. நீள புறவழிச்சாலை அமைக்கப்படும். நெல்லையில் 12.4 கி.மீ. நீள மேற்கு புறவழிச்சாலை அமைக்க ரூ.225 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
விபத்து பகுதிகளை சீர்செய்து குறுகலான வளைவுகள், சாலை சந்திப்புகளை மாற்றி அமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக செல்லும் கஷ்டம்ஸ் சாலை ரூ.50 கோடியில் மேம்படுத்தப்படும். திண்டுக்கல்லில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய மேம்பாலம் கட்ட ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு முழுவதும் 14 புறவழிச்சாலைகள் அமைக்க மொத்தம் ரூ.1,713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, "ஆற்றுப்பாலங்கள், மழைநீர் வடிகால், சாலை அகலப்படுத்துதல் பணிகளுக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். விருத்தாசலம் – தொழுதூர் சாலை, கொடை ரோடு – வத்தலகுண்டு சாலை, சிவகாசி – விருதுநகர் சாலை 4 வழிச்சாலைகளாக மேம்படுத்தப்பட உள்ளன. 550 கிமீ நீளச்சாலை இருவழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்படுத்தப்படும். ஆத்தூர் நகர், ஒசூர் மாநகருக்கு புறவழிச் சாலைகள் அமைக்க ரூ.550 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஆறுகளின் குறுக்கே 6 உயர்மட்ட பாலங்கள் கட்ட ரூ.295 கோடி ஒதுக்கீடு செய்யப்படும், "இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏஐ தொழில்நுட்பம் இல்லாத துறையே இல்லை : கனிமொழி எம்பி பேச்சு
திங்கள் 14, ஜூலை 2025 8:45:26 PM (IST)

தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
திங்கள் 14, ஜூலை 2025 5:49:00 PM (IST)

காப்புரிமை விவகாரம்: நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 14, ஜூலை 2025 4:38:44 PM (IST)

இபிஎஸ் ஒப்புக் கொண்டால் நிபந்தனையின்றி அதிமுகவில் இணைவேன் : ஓபிஎஸ் அறிவிப்பு!
திங்கள் 14, ஜூலை 2025 4:24:50 PM (IST)

பள்ளிகளில் ப வடிவ இருக்கையால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்: பாஜக குற்றச்சாட்டு!
திங்கள் 14, ஜூலை 2025 12:57:07 PM (IST)

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவு : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!
திங்கள் 14, ஜூலை 2025 12:17:46 PM (IST)
