» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.98.81 இலட்சம் மதிப்பில் உபகரணங்கள்: அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
ஞாயிறு 29, ஜூன் 2025 12:49:57 PM (IST)

திருநெல்வேலியில் 1231 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.98.81 இலட்சம் மதிப்பில் உபகரணங்களை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற விழாவில் மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, அலிம்கோ மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் சமுதாய பொறுப்பு நிதித் திட்டத்தின் கீழ்; ரூ.98.81 இலட்சம் மதிப்பில் 1231 மாற்றுத்திறனாளி உபகரணங்களை பயனாளிகளுக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர்.மோனிகா ராணா துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், இந்தியன் ஆயில் நிறுவனம் விற்பனை மேலாளர் பிரகதீஷ்வரன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் செல்வலெட்சுமி அபிதாப், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சு.சிவசங்கரன், அலிம்கோ நிறுவன மேலாளர்கள் பி.கே.குப்தா, ரிஷப் மெக்ரோட்ரா, மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்!
சனி 5, ஜூலை 2025 5:15:49 PM (IST)

விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ. 5 இலட்சம் வரை கடன் உதவி : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
சனி 5, ஜூலை 2025 4:39:34 PM (IST)

எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
சனி 5, ஜூலை 2025 11:43:12 AM (IST)

தூத்துக்குடி விமான நிலையம் ரூ.380 கோடியில் விரிவாக்கம் : விரைவில் திறப்பு விழா!
சனி 5, ஜூலை 2025 8:58:51 AM (IST)

அரசு பேருந்தில் திடீரென மயங்கி சரிந்த ஓட்டுநர் : பயணிகள் தப்பினர் - தூத்துக்குடியில் பரபரப்பு
சனி 5, ஜூலை 2025 8:07:46 AM (IST)
