» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையப்பர் கோவில் திருவிழாவில் சாதிய அடையாளங்கள் இருக்க கூடாது: உயர்நீதிமன்றம்
வெள்ளி 27, ஜூன் 2025 3:58:10 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் எந்தவித சாதி அடையாளங்களையும் பயன்படுத்தக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மாதவன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் "சாதி ரீதியான படுகொலை திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகமாக நடைபெற்று வருகிறது. பொது இடங்களில் சாதி ரீதியான அடையாளங்களை வெளிப்படுத்துவது இதற்குமூல காரணமாக இருந்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் தேர் திருவிழா வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழா வருகின்ற ஜூலை 8-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்தும் கலந்து கொள்கின்றனர்.
இந்த திருவிழாவில் வருடம் வருடம் சாதி ரீதியான கலர் வண்ணங்களை கொண்ட பட்டாசுகள் வெடிக்க செய்வது, பல்வேறு சமுதாய தலைவர்களை வாழ்க வாழ்க என கோஷமிடுவது, ஒரு சிலர் ஒழிக கோஷம் போடுவது, மேலும் திருவிழாவிற்கு வரும் இளைஞர்கள் தங்கள் சாதி ரீதியான டி-சர்டுகளை அணிந்து வந்து சாதி ரீதியான ரிப்பன்கள் அணிந்து வருவது போன்ற கலாச்சாரத்தை கையில் எடுத்துள்ளனர்.
இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதில் மிகுந்த சிரமமும் ஏற்படுகிறது. எனவே ஜாதி மோதல்களை உருவாக்க மூல காரணியாக உள்ள இந்த செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும். திருவிழாவிற்கு வரும் இளைஞர்கள் கலர் கலராக பட்டாசுகள் வெடிப்பதற்கும் சாதி ரீதியான படமோ பெயரோ கொடியோ காண்பிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம், நீதிபதி மரியா கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், ஏற்கனவே சாதிய ரீதியான அடையாளங்கள் பயன்பாடு குறித்த விதிகள் உள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் மற்றும் இந்து சமய அறநிலை துறை ஆணையாளர் இணைந்து இந்த திருவிழாவின் போது எந்தவித சாதிய அடையாளங்கள் இல்லாத வகையில் தேர் திருவிழாவை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்ன உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும்: அஜித் தாய்க்கு இபிஎஸ் ஆறுதல்!
புதன் 2, ஜூலை 2025 5:46:53 PM (IST)

அஜித்குமார் மீது புகார் கொடுத்த பெண் மீது ரூ.16 லட்சம் பணமோசடி புகார்!
புதன் 2, ஜூலை 2025 4:27:26 PM (IST)

பாமகவில் இருந்து அருள் எம்.எல்.ஏ. நீக்கம் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
புதன் 2, ஜூலை 2025 12:48:55 PM (IST)

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமார் சகோதரருக்கு அரசு வேலை!!
புதன் 2, ஜூலை 2025 12:41:25 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

பரமக்குடி – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை திட்டம் : எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
புதன் 2, ஜூலை 2025 10:47:05 AM (IST)
