» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தொழில் மைய அலுவலகத்தில் வாகனங்கள் ஏலம் : ஜூலை 14 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெள்ளி 27, ஜூன் 2025 3:28:34 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட தொழில் மையத்தில் முதிர்ந்த நிலையில் கழிவு நீக்கம் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏல முறையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் (பொ) முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "திருநெல்வேலி மாவட்ட தொழில் மையம், அலுவலகத்தில் முதிர்ந்த நிலையில் கழிவு நீக்கம் செய்யப்பட்ட இருசக்கர வாகனம் ("Hero Honda – CB 100’ எண்: TN 72 G 0289) மற்றும் நான்கு சக்கர வாகனம் ("Bolero LX” எண்:TN 72 G 0848) பொது ஏல முறையில் விற்பனை செய்யப்படவுள்ளது.
மேற்கூறிய இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தின் நிர்ணயிக்கப்பட்ட விலை முறையே ரூ.3,600/- + GST மற்றும் ரூ.1,10,500/- + GST மற்றும் பிணையத்தொகை முறையே ரூ.360/- மற்றும் ரூ.11,050/- ஆகும்.
மேற்கூறிய வாகனங்களை ஏலம் / ஒப்பந்தப்புள்ளி முறையில் எடுக்க விரும்புவோர் விளம்பர நாளிலிருந்து அலுவலக நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை கீழ்கண்ட முகவரியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்தினை பார்வையிட்டு அரசு விதிகளின்படி நிபந்தனைகளை தெரிந்து கொள்ளலாம்.
வாகனத்தினை ஏலம் பெறுவதற்கு மூடி முத்திரையிட்ட விலைப்புள்ளி 14.07.2025 மாலை 3.00 மணி வரை வரவேற்கப்படுகிறது. ஏலம் நடைபெறும் நாள்.14.07.2025 மாலை 3.00 மணி. அலுவலக முகவரி: பொது மேலாளர். மாவட்டத் தொழில் மையம், திருநெல்வேலி – 627 011 மின்னஞ்சல் : [email protected] என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும்: அஜித் தாய்க்கு இபிஎஸ் ஆறுதல்!
புதன் 2, ஜூலை 2025 5:46:53 PM (IST)

அஜித்குமார் மீது புகார் கொடுத்த பெண் மீது ரூ.16 லட்சம் பணமோசடி புகார்!
புதன் 2, ஜூலை 2025 4:27:26 PM (IST)

பாமகவில் இருந்து அருள் எம்.எல்.ஏ. நீக்கம் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
புதன் 2, ஜூலை 2025 12:48:55 PM (IST)

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமார் சகோதரருக்கு அரசு வேலை!!
புதன் 2, ஜூலை 2025 12:41:25 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

பரமக்குடி – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை திட்டம் : எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
புதன் 2, ஜூலை 2025 10:47:05 AM (IST)
