» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி பக்கிள் ஓடைக்குள் விழுந்த கன்றுக்குட்டி : தாய்ப்பசு பாசப் போராட்டம்!!
வெள்ளி 27, ஜூன் 2025 8:34:47 AM (IST)

தூத்துக்குடியில் பக்கிள் ஓடைக்குள் தவறி விழுந்த கன்றுக்குட்டியை மீட்க பசுமாடு நடத்திய பாசப்போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் பக்கிள் ஓடை அமைந்து உள்ளது. இந்த வெள்ளநீர் ஓடையில் பல்வேறு பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் சேர்ந்து கடலுக்கு சென்று வருகிறது. நேற்று தூத்துக்குடி பண்டுகரை சாலை பகுதியில் உள்ள பக்கிள் ஓடைக்குள் ஒரு கன்றுகுட்டி எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து விட்டது. அப்போது தண்ணீர் குறைந்த அளவே இருந்ததால் அந்த கன்று குட்டி அங்கும், இங்குமாக ஓடியது.
ஓடையில் இருந்து வெளியில் வருவதற்கு முடியாமல் தவித்தது. இதனை பார்த்த அந்த கன்று குட்டியின் தாய் பசு, ஓடையின் அருகே உள்ள பக்கவாட்டு சுவர் பகுதியில் கன்றுகுட்டி செல்லும் இடமெல்லாம் பயங்கர சத்தம் போட்டுக் கொண்டே சென்றது. நீண்ட நேரமாக கன்று குட்டியை மீட்க தாய் பசு பாசப்போராட்டம் நடத்தி வந்தது. இந்த அந்த பகுதியில் உள்ளவர்கள் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தூத்துக்குடி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து பக்கிள் ஓடைக்குள் சிக்கி தவித்த கன்றுகுட்டியை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும்: அஜித் தாய்க்கு இபிஎஸ் ஆறுதல்!
புதன் 2, ஜூலை 2025 5:46:53 PM (IST)

அஜித்குமார் மீது புகார் கொடுத்த பெண் மீது ரூ.16 லட்சம் பணமோசடி புகார்!
புதன் 2, ஜூலை 2025 4:27:26 PM (IST)

பாமகவில் இருந்து அருள் எம்.எல்.ஏ. நீக்கம் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
புதன் 2, ஜூலை 2025 12:48:55 PM (IST)

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமார் சகோதரருக்கு அரசு வேலை!!
புதன் 2, ஜூலை 2025 12:41:25 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

பரமக்குடி – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை திட்டம் : எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
புதன் 2, ஜூலை 2025 10:47:05 AM (IST)
