» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதியோர் இல்லத்திற்கு சீல் வைப்பு : தூத்துக்குடி இல்லத்திற்கு முதியவர்கள் மாற்றம்
வியாழன் 26, ஜூன் 2025 5:53:08 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் முதியோர் இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த 5 முதியவர்கள் தூத்துக்குடி காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
தென்காசி மாவட்டம், சுந்தர பாண்டியபுரத்தில் முதியோர் இல்லத்தில் மாமிச உணவு அருந்திய 5 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து முதியோர் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சீல் வைத்தனர். அதன் காரணமாக அங்கு தங்கி இருந்த முதியோர்களை மருத்துவ பரிசோதனைக்காக தென்காசி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியோர்களை வேறு முதியோர் இல்லத்திற்கு மாற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதில், தென்காசி மாவட்ட சமூக நல அலுவலர் பரிந்துரையின் பெயரில் தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி கிராமம் அன்பு உள்ளங்கள் முதியோர் இல்லத்தில் ஒரு ஆண் மற்றும் 4 பெண்கள் என மொத்தம் 5 முதியோர்கள் பராமரிப்பிற்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும்: அஜித் தாய்க்கு இபிஎஸ் ஆறுதல்!
புதன் 2, ஜூலை 2025 5:46:53 PM (IST)

அஜித்குமார் மீது புகார் கொடுத்த பெண் மீது ரூ.16 லட்சம் பணமோசடி புகார்!
புதன் 2, ஜூலை 2025 4:27:26 PM (IST)

பாமகவில் இருந்து அருள் எம்.எல்.ஏ. நீக்கம் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
புதன் 2, ஜூலை 2025 12:48:55 PM (IST)

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமார் சகோதரருக்கு அரசு வேலை!!
புதன் 2, ஜூலை 2025 12:41:25 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

பரமக்குடி – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை திட்டம் : எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
புதன் 2, ஜூலை 2025 10:47:05 AM (IST)
