» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போதைப் பொருள் வழக்கு : நடிகர் கிருஷ்ணா கைது!!
வியாழன் 26, ஜூன் 2025 3:59:27 PM (IST)
நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணாவின் சமூக வலைதளக் கணக்குகளை ஆய்வு செய்து போதைப்பொருள் குறித்து கருத்துகளை பரிமாறியுள்ளாரா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, சென்னை பெசன்ட் நகரில் உள்ள நடிகர் கிருஷ்ணா வீட்டில் 2 மணி நேரமாக போலீசார் சோதனை நடத்தினர். இரைப்பை அலர்ஜியால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக வாக்குமூலம் அளித்த நிலையில், அவர் பயன்படுத்தும் மருந்துகளை ஆய்வுக்காக போலீசார் எடுத்து கொண்டனர். இந்த நிலையில், கிருஷ்ணாவின் நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு சிலரிடம் code word மூலம் தகவல் பரிமாற்றம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2020 முதல் கிருஷ்ணாவின் செல்போனில் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வரும் நிலையில், Code word-க்கு என்ன அர்த்தம்? அது போதைப்பொருள் தொடர்புடையதா? என கிருஷ்ணாவிடம் விசாரணை நடந்தது. கிருஷ்ணாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மேலும் போதைப் பொருள் சப்ளை செய்த கெவின் என்பவரும் கைது செய்யப்பட்டார். கெவின் – கைதான அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் இடையே நடந்த பணப்பரிவர்த்தனையும் விசாரணையில் தெரியவந்துள்ளது. போதைப்பொருள் வழக்கில் ஏற்கனவே நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும்: அஜித் தாய்க்கு இபிஎஸ் ஆறுதல்!
புதன் 2, ஜூலை 2025 5:46:53 PM (IST)

அஜித்குமார் மீது புகார் கொடுத்த பெண் மீது ரூ.16 லட்சம் பணமோசடி புகார்!
புதன் 2, ஜூலை 2025 4:27:26 PM (IST)

பாமகவில் இருந்து அருள் எம்.எல்.ஏ. நீக்கம் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
புதன் 2, ஜூலை 2025 12:48:55 PM (IST)

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமார் சகோதரருக்கு அரசு வேலை!!
புதன் 2, ஜூலை 2025 12:41:25 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

பரமக்குடி – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை திட்டம் : எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
புதன் 2, ஜூலை 2025 10:47:05 AM (IST)
