» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அ.தி.மு.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்: இ.பி.எஸ். உத்தரவு
வியாழன் 26, ஜூன் 2025 12:54:37 PM (IST)
விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அ.தி.மு.க. நிர்வாகி ஆனந்தகுமாரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை தலைவராக இருப்பவர் ஆனந்தகுமார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அன்பு அண்ணன், மக்கள் தளபதி விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என அவர் பதிவிட்டிருந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனிடையே ஆனந்தகுமாரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை தலைவர் ஆனந்தகுமார் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அவருடன் கட்சியினர் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும்: அஜித் தாய்க்கு இபிஎஸ் ஆறுதல்!
புதன் 2, ஜூலை 2025 5:46:53 PM (IST)

அஜித்குமார் மீது புகார் கொடுத்த பெண் மீது ரூ.16 லட்சம் பணமோசடி புகார்!
புதன் 2, ஜூலை 2025 4:27:26 PM (IST)

பாமகவில் இருந்து அருள் எம்.எல்.ஏ. நீக்கம் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
புதன் 2, ஜூலை 2025 12:48:55 PM (IST)

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமார் சகோதரருக்கு அரசு வேலை!!
புதன் 2, ஜூலை 2025 12:41:25 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

பரமக்குடி – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை திட்டம் : எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
புதன் 2, ஜூலை 2025 10:47:05 AM (IST)
