» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மது அருந்திவிட்டு ஆபாச நடனமாடிய 3 அர்ச்சகர்கள் சஸ்பெண்ட்: அறநிலையத்துறை உத்தரவு!
வியாழன் 26, ஜூன் 2025 12:21:25 PM (IST)
ஸ்ரீவில்லிபுத்தூரில் மது குடித்துவிட்டு ஆபாசமாக நடனமாடிய கோயில் அர்ச்சகர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் உதவி அர்ச்சகராகப் பணிபுரிபவர் கோமதிவிநாயகம் (30). இவரது வீட்டில், கும்பாபிஷேக பணிக்கு வந்த அர்ச்சகர்கள் சிலர் தங்கியுள்ளனர்.
இவர்களில் சிலர் மது குடித்துவிட்டு வீட்டில் ஆபாசமாக நடனமாடியதாகக் கூறப்படுகிறது. இதை வீடியோ எடுத்த கோயில் முன்னாள் அர்ச்சகர் ஹரிஹரன் மகன் சபரிநாதன், அதை அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகக் குழுவினருக்கு அனுப்பிவைத்து, புகார் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்கிலும் வைரலாகப் பரவியது.
அதுமட்டும் இன்றி கோவில் வளாகத்தில் பணிபுரியும் பெண்கள் மீது விபூதி அடித்து அர்ச்சகர்கள் விளையாடும் வீடியோவும் வெளியானது. இதையடுத்து, தங்களை பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்டதாக சபரிநாதன் மீது காவல் நிலையத்தில் கோமதிவிநாயகம் புகார் அளித்தார். அதேநேரம், ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் தக்காரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அர்ச்சகர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த நிலையில், அர்ச்சகர்கள் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், கோவில் பணியாளர் கார்த்திக் மீதும் புகாரளிக்கப்பட்ட நிலையில் அவர் மீது விரைவில் நடவடிக்கை பாயும் எனவும் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

பொன்முடி மீதான வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!!
வெள்ளி 4, ஜூலை 2025 5:23:45 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் விஜய்: செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
வெள்ளி 4, ஜூலை 2025 5:06:04 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

காதலர்களை பார்த்த சிறுவன் கொடூர கொலை: கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது
வெள்ளி 4, ஜூலை 2025 4:27:54 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)
