» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எதிர்க்கட்சியினரை கொலை செய்யும் அளவுக்கு பதவி வெறி: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!!
வியாழன் 26, ஜூன் 2025 12:13:05 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

இக்கொலைக்கு உள்ளாட்சி தேர்தல் போட்டியும் ஒரு காரணம் என்ன செய்திகள் வருகின்றன. இதையும் "தனிப்பட்ட கொலை" என்ற அளவோடு தான் ஸ்டாலின் மாடல் திமுக அரசு கடந்து செல்ல முனையுமா..?
திமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் என்பது இவர்களின் அராஜகத்திற்கு இடையில் தான் நடைபெறும் என்பது நாடறிந்த உண்மை. ஆனால், அதற்காக, எதிர்க்கட்சியைச் சார்ந்தோரை கொலை செய்யும் அளவுக்கு திமுக-வினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா..?
சட்டம் ஒழுங்கை அடியோடு சீர்குலைத்துவிட்டு, அதை தட்டிக் கேட்கும் இடத்தில் இருக்கும் எதிர்க்கட்சியினரின் உயிருக்கே பாதுகாப்பற்ற நிலையில், தமிழ்நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளியுள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
முத்துபாலகிருஷ்ணன் கொலை வழக்கில் தொடர்புள்ள திமுக பிரமுகர் கருணாகரன் உள்ளிட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

பொன்முடி மீதான வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!!
வெள்ளி 4, ஜூலை 2025 5:23:45 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் விஜய்: செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
வெள்ளி 4, ஜூலை 2025 5:06:04 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

காதலர்களை பார்த்த சிறுவன் கொடூர கொலை: கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது
வெள்ளி 4, ஜூலை 2025 4:27:54 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)
