» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போதைப் பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய போலீசார் விசாரணை!
வியாழன் 26, ஜூன் 2025 10:53:28 AM (IST)
போதைப் பொருள் வழக்கில் நடிகா் கிருஷ்ணாவிடம் சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் 16 மணிநேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினா்.

மேலும், இந்தக் கும்பலுக்கும் கழுகு திரைப்பட நடிகா் கிருஷ்ணாவுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நடிகா் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த போலீசா திட்டமிட்டிருந்தனா். ஆனால், அவா் கேரளத்தில் திரைப்பட படப்பிடிப்பில் இருந்ததால் விசாரணைக்கு ஆஜராமல் இருந்தாா். மேலும், அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, தனிப்படையினா் கிருஷ்ணாவை தேடி கேரளத்துக்கு சென்றனா். இந்நிலையில், அவா் தனது வழக்குரைஞருடன் நுங்கம்பாக்கம் போலீசா முன் புதன்கிழமை நண்பகல் ஆஜரானாா். போலீசா ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வைத்து கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தினா்.
இதில், தனக்கு போதைப் பொருள் பழக்கம் கிடையாது, தான் ஏற்கெனவே இதய நோயாலும், இரைப்பை பிரச்னையாலும் பாதிக்கப்பட்டிருப்பதால் போதைப் பொருள் உட்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளாா். மேலும், பிரசாத்துக்கும் தனக்கும் நேரடியான தொடா்பு கிடையாது என்றும் கூறியுள்ளாா்.
மேலும், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என முடிவு வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்த் உள்ளிட்டோருடனான கிருஷ்ணாவின் உரையாடல் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, சென்னை பெசண்ட் நகரில் உள்ள கிருஷ்ணாவில் வீட்டில் இரண்டு மணிநேரத்துக்கு மேலாக காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

பொன்முடி மீதான வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!!
வெள்ளி 4, ஜூலை 2025 5:23:45 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் விஜய்: செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
வெள்ளி 4, ஜூலை 2025 5:06:04 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

காதலர்களை பார்த்த சிறுவன் கொடூர கொலை: கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது
வெள்ளி 4, ஜூலை 2025 4:27:54 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)
