» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சுங்கச் சாவடிகளில் வீண் தாமதத்தை தடுக்க வேறு வழியில்லையா? உயர்நீதிமன்றம் கேள்வி
புதன் 25, ஜூன் 2025 4:09:37 PM (IST)
சுங்கச் சாவடிகளில் வீண் தாமதத்தை தடுக்க வேறு வழியில்லையா? என உயர்நீதிமன்ற மதுரை கிளைக் கேள்வி எழுப்பியது.
மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் எல்லா மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம், அரசியலமைப்பிற்கு எதிரானது. இதனால் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விசாரணையின்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை, "தேசிய நெஞ்சாலை அமைப்பதன் நோக்கமே தடையற்ற பயணத்திற்காகத்தான். ஆனால் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் சுங்க கட்டணம் செலுத்தி நகர்வதற்கு அரைமணி நேரமாகிறது. சுங்கச் சாவடிகளில் வீண் தாமதத்தை தடுக்க வேறு வழியில்லையா?" எனக் கேள்வி எழுப்பியது. அத்துடன் இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டால் இன் மால் விற்பனை கண்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்
சனி 13, டிசம்பர் 2025 3:13:37 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

ஓபிஎஸ் தலைமையில் டிச.15ல் நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
சனி 13, டிசம்பர் 2025 11:52:30 AM (IST)


.gif)