» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சமையல் எண்ணெய்க்கு பணம் கொடுக்க முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி? உயர்நீதிமன்றம் கேள்வி
செவ்வாய் 24, ஜூன் 2025 4:40:54 PM (IST)
சமையல் எண்ணெய் வினியோகம் செய்த நிறுவனத்துக்கு பணம் கொடுக்க முடியாத அளவுக்கு, மாநிலத்தில் நிதி நெருக்கடி நிலவுகிறதா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு பொது வினியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்குவதற்காக சமையல் எண்ணெய் கொள்முதல் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரில் கலந்துகொண்டு ஒப்பந்தம் பெற்ற கே.டி.வி. ஹெல்த் புட் என்ற தனியார் நிறுவனம் சமையல் எண்ணெய் வினியோகம் செய்தது. இதற்காக அந்த தனியார் நிறுவனத்துக்கு 141 கோடியே 22 லட்சம் ரூபாய் அரசு வழங்க வேண்டும்.
ஒப்பந்தத்தின்படி 30 நாட்களுக்குள் இந்த தொகையை அரசு வழங்க வேண்டும். அரசு வழங்காததால், தனியார் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சமையல் எண்ணெய் தொடர்ந்து பொது வினியோகத்துக்கு வினியோகம் செய்து வருவதால், தற்போது அரசு ரூ.200 கோடிக்கு மேல் வழங்க வேண்டியது உள்ளது.
இந்த தொகையை வழங்காமல் அடுத்த டெண்டர் கோரும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி, அரசு ஊழியர்களின் ஓய்வுகால பண பலன்களை கடந்த 2 வாரங்களாக அரசு வழங்கவில்லை என்று பல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? மாநில அரசு பிறருக்கு முன் உதாரணமாக திகழ வேண்டும். ஒப்பந்ததாரர்களுக்கு தொகை வழங்காமல் இருப்பது எதை காட்டுகிறது? அல்லது மாநிலத்தில் நிதி நெருக்கடி நிலையில் நிலவுகிறதா? என்று அரசு தரப்புக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினார்.பின்னர், இந்த வழக்கில் மனுதாரருக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்குவது குறித்து அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அரசு தரப்பு வக்கீலுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

பொன்முடி மீதான வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!!
வெள்ளி 4, ஜூலை 2025 5:23:45 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் விஜய்: செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
வெள்ளி 4, ஜூலை 2025 5:06:04 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

காதலர்களை பார்த்த சிறுவன் கொடூர கொலை: கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது
வெள்ளி 4, ஜூலை 2025 4:27:54 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)
