» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் மீன்வாங்க மக்கள், வியாபாரிகள் குவிந்தனர் : மீனவர்கள் மகிழ்ச்சி
சனி 21, ஜூன் 2025 7:31:40 PM (IST)

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்ட நிலையில், மீன்களுக்கு ஓரளவு விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான நாட்டுப் படகுகள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 16, 17 தேதிகளில் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் நாட்டுப் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி ஏராளமான நாட்டுப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன.
இதன் காரணமாக இன்று சனிக்கிழமை தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திற்கு குறைவான நாட்டுப் படகுகளே கரை திரும்பின. இதன் காரணமாக மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது. இருப்பினும் கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் இருப்பதால் மீன்களை வாங்க மீன் வியாபாரிகள் அதிக அளவு வந்ததால் மீன்களுக்கு ஓரளவு விலை கிடைத்தது. இதன் காரணமாக மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சீலா மீன்கள் முற்றிலுமாக வரத்து இல்லாத நிலையில் விளை மீன், ஊளி,பாறை ஆகிய மீன்கள் கிலோ 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையும், கேரை கிலோ 400 ரூபாய் வரையும், கிழை வாழை கிலோ 350 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையும், சூரை கிலோ 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனையானது. மணலை கிலோ 200 ரூபாய் வரை விற்பனையானது.
தற்போது விசைப்படகுகள் தடைக்காலத்திற்கு பின்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருவதால் மீன்களின் விலை கடந்த 60 நாட்களுக்கு பின்பு நாட்களுக்குப் பின்பு ஓரளவு குறைய தொடங்கியதால் பொதுமக்கள் மீன்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும்: அஜித் தாய்க்கு இபிஎஸ் ஆறுதல்!
புதன் 2, ஜூலை 2025 5:46:53 PM (IST)

அஜித்குமார் மீது புகார் கொடுத்த பெண் மீது ரூ.16 லட்சம் பணமோசடி புகார்!
புதன் 2, ஜூலை 2025 4:27:26 PM (IST)

பாமகவில் இருந்து அருள் எம்.எல்.ஏ. நீக்கம் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
புதன் 2, ஜூலை 2025 12:48:55 PM (IST)

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமார் சகோதரருக்கு அரசு வேலை!!
புதன் 2, ஜூலை 2025 12:41:25 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

பரமக்குடி – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை திட்டம் : எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
புதன் 2, ஜூலை 2025 10:47:05 AM (IST)
