» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கொடி கம்பங்களை அகற்ற தடை கோரிய மனு தள்ளுபடி
சனி 21, ஜூன் 2025 12:01:23 PM (IST)
தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பங்களை அகற்ற தடை விதிக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமான அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே எங்களது கொடிக் கம்பங்களை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நிறுவி உள்ளோம். உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் எங்களது கட்சி கொடிக் கம்பங்களை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
ஒரு சில இடங்களில் எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி கொடிக் கம்பங்களை அகற்றி வருகின்றனர். இது எங்களின் உரிமையை பறிப்பதாக உள்ளது. எனவே, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பங்களை அகற்ற தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி சி.சரவணன் விசாரித்தார். அரசு தரப்பில், பொது இடங்களில் உள்ள கட்சி கொடிக் கம்பங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது எனக் கூறப்பட்டது. இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும்: அஜித் தாய்க்கு இபிஎஸ் ஆறுதல்!
புதன் 2, ஜூலை 2025 5:46:53 PM (IST)

அஜித்குமார் மீது புகார் கொடுத்த பெண் மீது ரூ.16 லட்சம் பணமோசடி புகார்!
புதன் 2, ஜூலை 2025 4:27:26 PM (IST)

பாமகவில் இருந்து அருள் எம்.எல்.ஏ. நீக்கம் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
புதன் 2, ஜூலை 2025 12:48:55 PM (IST)

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமார் சகோதரருக்கு அரசு வேலை!!
புதன் 2, ஜூலை 2025 12:41:25 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

பரமக்குடி – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை திட்டம் : எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
புதன் 2, ஜூலை 2025 10:47:05 AM (IST)
