» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள தமிழக மாணவ, மாணவியருக்கு அண்ணாமலை வாழ்த்து!
சனி 14, ஜூன் 2025 5:05:14 PM (IST)
நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள தமிழக மாணவ, மாணவியர் அனைவருக்கும் பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் : நீட் தேர்வில், தமிழகத்தில் தேர்வெழுதிய மாணவர்களில், 76,181 மாணவர்கள், தகுதி மதிப்பெண்கள் பெற்றுள்ளதும், முதல் 100 இடங்களில் 6 இடங்களை, தமிழக மாணவர்கள் பிடித்துள்ளதும், மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவியர் அனைவருக்கும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.திமுக உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்டு வரும் நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை உடைத்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் சாதித்துக் கொண்டிருப்பது பெருமைக்குரியது. திமுக அரசு, இனியாவது தனது பொய் பிரச்சாரங்களை நிறுத்திவிட்டு, அரசு மருத்துவக் கல்லூரிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 13, டிசம்பர் 2025 5:50:12 PM (IST)

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம் : சீமான் குற்றச்சாட்டு!
சனி 13, டிசம்பர் 2025 4:04:43 PM (IST)

தூத்துக்குடியில் ஸ்டால் இன் மால் விற்பனை கண்காட்சி : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்
சனி 13, டிசம்பர் 2025 3:13:37 PM (IST)

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

ஓபிஎஸ் தலைமையில் டிச.15ல் நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
சனி 13, டிசம்பர் 2025 11:52:30 AM (IST)


.gif)