» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார்: ரஜினிகாந்த் இரங்கல்!
வியாழன் 29, மே 2025 10:32:50 AM (IST)
பிரபல நடிகர் ராஜேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 75.

இவர் நடிப்பில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும் பல சின்னத்திரை தொடர்களும் வெளியாகியிருக்கின்றன. தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர்,
நடிகர் விஜய் சேதுபதியின் தர்மதுரை திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிப்பைத் தாண்டி ஜோதிடத்திலும் ஆர்வம் கொண்டவரான இவர், அத்துறையிலும் கவனம் பெற்றவராகவே இருந்தார். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ராஜேஷ் இன்று காலை சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்ததார்.
ரஜினிகாந்த் இரங்கல்: அவர் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது. அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இசைஞானி இளையராஜாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியம்: அண்ணாமலை நெகிழ்ச்சி!
சனி 7, ஜூன் 2025 12:25:18 PM (IST)

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அலைமோதல் : அருவிகளில் உற்சாக குளியல்!
சனி 7, ஜூன் 2025 12:11:47 PM (IST)

மாணவர்களின் அறுவை சிகிச்சை பயிற்சிக்கு வெண் பன்றிகள் பயன்படுத்த அனுமதி!
சனி 7, ஜூன் 2025 11:56:48 AM (IST)

சமூக வலைதளங்களில் போலீஸ் சீருடையுடன் புகைப்படம் வெளியிட கூடாது : டிஜிபி உத்தரவு!
சனி 7, ஜூன் 2025 10:58:53 AM (IST)

மாணவிக்கு பாலியல் தொல்லை: துப்பாக்கியை காட்டி மிரட்டியவர் மும்பையில் கைது
சனி 7, ஜூன் 2025 10:35:25 AM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் அழைப்பு
சனி 7, ஜூன் 2025 9:05:57 AM (IST)
