» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : வடமாநில வாலிபர் கைது

திங்கள் 5, மே 2025 11:28:41 AM (IST)

சேலம் அருகே ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலம் பாட்னாவிற்கு கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-06085) இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இந்த ரயிலில் எஸ்-6 முன்பதிவு பெட்டியில் மேற்கு வங்காளம் மாநிலம் ஜல்பைக்குரி பகுதியை சேர்ந்த 28 மற்றும் 22 வயது கொண்ட அக்காள்-தங்கை பாலக்காடு ரயில் நிலையத்தில் இருந்து பயணம் செய்தனர். 

இவர்கள் இருந்த இருக்கையின் அருகில் மற்றொரு இருக்கையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இருந்துள்ளார். இந்த ரயில் திருப்பூர் பகுதியில் வந்தபோது, அந்த வாலிபர் திடீரென 22 வயது இளம்பெண்ணுக்கு இடுப்பு மற்றும் உடல் பகுதிகளில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், அந்த வாலிபரை கண்டித்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதையடுத்து உடனே ஆன்லைன் மூலம் ரயில்வே போலீசில் சம்பந்தப்பட்ட பெண் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்ததும், சம்பந்தப்பட்ட பெட்டிக்கு சேலம் ரயில்வே போலீசார் சென்று விசாரித்தனர்.

அப்போது, ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதையடுத்து அந்த பெண்ணிடம் முறையாக புகார் பெற்று விசாரணை நடத்தினர்.

இதில், அந்த வாலிபர் பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தை சேர்ந்த முன்னாகுமார் (32) என்பது தெரியவந்தது. அவர் மீது பாலியல் தொல்லை கொடுத்தது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட வாலிபரை சேலம் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory