» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆசிாியைக்கு சாதனையாளர் விருது
சனி 3, மே 2025 4:37:24 PM (IST)

சீர்காழியில் நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி ஆசிாியைக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜாக்கி உலக சாதனை புத்தகத்தின் வருடாந்திர சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழா சீர்காழியில் நடைபெற்றது. இதில் உலக சாதனை புரிந்தவர்கள் மற்றும் பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் தூத்துக்குடி ஜின் பாக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை சபிதாவுக்கு கல்வித் துறையில் பல்வேறு சாதனைகளையும், பல ஆண்டுகளாக திறமையான மாணவர்களை உருவாக்கி வருவதையும் பாராட்டி இந்த ஆண்டின் சிறந்த 100 பெண்மணிகளில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியன் ஐகானிக் பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
மேலும் கருத்தாளராகவும் ஆசிரியராகவும் இவரது கற்பித்தல் திறனை பாராட்டி முன்மாதிரி ஆசிரியை என்ற கோல்டு ஸ்டார் விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விழாவில் உலக சாதனை புத்தக நிறுவனர் ஜேக்கப் ஞான செல்வன், சிஇஓ எஸ்தர், பிரசிடெண்ட் பிரியா சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இரட்டை விருது பெற்ற ஆசிரியைக்கு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் தலை துண்டித்து படுகொலை: பட்டுக்கோட்டை அருகே பயங்கரம்!
செவ்வாய் 6, மே 2025 10:27:35 AM (IST)

அதிமுக ஆட்சி மலர்ந்ததும் வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் : எடப்பாடி பழனிசாமி
திங்கள் 5, மே 2025 3:59:37 PM (IST)

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம், நவீன நூலகம்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திங்கள் 5, மே 2025 3:30:21 PM (IST)

பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 5, மே 2025 3:14:08 PM (IST)

நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்: திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல்!
திங்கள் 5, மே 2025 12:45:01 PM (IST)

திமுக பொதுக்கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்விளக்கு கம்பம்: நூலிழையில் தப்பிய ஆ.ராசா!
திங்கள் 5, மே 2025 11:35:09 AM (IST)
