» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தாழையூத்து மேம்பாலத்தில் வாகன விபத்து : பள்ளி தலைமை ஆசிரியர் பரிதாப சாவு

சனி 3, மே 2025 3:26:17 PM (IST)



தாழையூத்து  சங்கர் நகர் மேம்பாலத்தில் ஸ்கூட்டர் மீது வாகனம் மோதிய விபத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். 

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே பள்ளமடை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் 59. இவரது வீடு பாளை., சிவன் கோவில் மேலரதவீதியில் உள்ளது. தினமும் பள்ளிக்கு காரில் செல்வார். தற்போது விடுமுறையில் இருந்தார். நேற்று பள்ளியில் ஒரு மாணவன் புதிதாக சேர்ந்தார். அந்த ஒரு மாணவன் சேர்க்கைக்காக தலைமை ஆசிரியர் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்றார். 

பின்னர் மதியம் வீடு திரும்பினார்.  தாழையூத்து சங்கர் நகர் மேம்பாலத்தில் வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு உடல் நசுங்கியது. சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் அணிந்திருந்த ஹெல்மெட் அவரது தலையிலேயே இருந்தது. தாழையூத்து போலீசார் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவர்கள் நலனில் எப்போதும் அக்கறை கொண்ட தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் அடுத்த ஆண்டு ஓய்வு பெற இருந்தார். பள்ளியில் பணியில் இருந்த ஆசிரியர்கள் ஒரு மாணவன் சேர்க்கையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் வரவேண்டாம் என கூறிய போதும்கூட அவர் டூவீலரில் பள்ளிக்கு சென்று திரும்பியபோது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory