» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அமலாக்கத் துறையை அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தும் பாஜக அரசுக்கு திமுக கண்டனம்
சனி 3, மே 2025 12:09:33 PM (IST)

அமலாக்கத் துறையை அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்து திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(சனிக்கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் மற்றும் மறைந்த முன்னாள் கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் முதல்வர்களில் முன்னோடியாக விளங்கும் தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தும், திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். மதுரை மாநகரில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்படும். அமலாக்கத் துறையை அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் தலை துண்டித்து படுகொலை: பட்டுக்கோட்டை அருகே பயங்கரம்!
செவ்வாய் 6, மே 2025 10:27:35 AM (IST)

அதிமுக ஆட்சி மலர்ந்ததும் வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் : எடப்பாடி பழனிசாமி
திங்கள் 5, மே 2025 3:59:37 PM (IST)

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம், நவீன நூலகம்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திங்கள் 5, மே 2025 3:30:21 PM (IST)

பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 5, மே 2025 3:14:08 PM (IST)

நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்: திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல்!
திங்கள் 5, மே 2025 12:45:01 PM (IST)

திமுக பொதுக்கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்விளக்கு கம்பம்: நூலிழையில் தப்பிய ஆ.ராசா!
திங்கள் 5, மே 2025 11:35:09 AM (IST)
