» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
செங்கோட்டை அருகே ரயிலில் கடத்திய ரூ.34 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: 2 பேர் கைது!!
சனி 3, மே 2025 8:52:03 AM (IST)
செங்கோட்டை அருகே கேரள எல்லையில் ரயிலில் கொண்டு சென்ற ரூ.34 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக செங்கோட்டை அருகே கேரள மாநில எல்லையில் உள்ள புனலூர் ெரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த ரயில் நிலையத்திற்கு வந்தனர்.
ரயில் நிலையத்தை வந்தடைந்த உடன் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பெட்டியில் இருந்த 2 பேர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்கள் கொண்டு வந்த உடைமைகளை சோதனை செய்தனர்.
அப்ேபாது அதில் கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சோ்ந்த அப்துல் அஜீஸ் (35), விருதுநகர் பகுதியை சேர்ந்த பாலாஜி (40) என்பது தெரியவந்தது.
மேலும் பணம் தொடர்பாக போலீசார் ஆவணங்களை கேட்ட போது, அவர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.34 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புனலூரில் ரயில் கொண்டு சென்ற ரூ.34 லட்சம் ஹவாலா பணம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே-8ல் வெளியீடு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
செவ்வாய் 6, மே 2025 12:06:17 PM (IST)

பெண் தலை துண்டித்து படுகொலை: பட்டுக்கோட்டை அருகே பயங்கரம்!
செவ்வாய் 6, மே 2025 10:27:35 AM (IST)

அதிமுக ஆட்சி மலர்ந்ததும் வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் : எடப்பாடி பழனிசாமி
திங்கள் 5, மே 2025 3:59:37 PM (IST)

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம், நவீன நூலகம்: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திங்கள் 5, மே 2025 3:30:21 PM (IST)

பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 5, மே 2025 3:14:08 PM (IST)

நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்: திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல்!
திங்கள் 5, மே 2025 12:45:01 PM (IST)
