» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அண்ணாமலை படத்துடன் ஆடு வெட்டிய சம்பவம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!
திங்கள் 15, ஜூலை 2024 11:42:44 AM (IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை படத்துடன் சாலையில் ஆடு வெட்டிய விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியை தழுவினார். இதனைக் கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரியில் திமுக தொண்டர்கள் அண்ணாமலை உருவபடத்தின் முன் சாலையில் ஆடு வெட்டிக் கொண்டாடினர்.
இந்த காணொலிகளும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரத்தில் திமுக தொண்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜக பிரமுகர் மோகன்தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், சாலையில் அண்ணாமலையின் புகைப்படத்தை வைத்து ஆடு வெட்டியதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று அதிருப்தி தெரிவித்தது. மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும்: அஜித் தாய்க்கு இபிஎஸ் ஆறுதல்!
புதன் 2, ஜூலை 2025 5:46:53 PM (IST)

அஜித்குமார் மீது புகார் கொடுத்த பெண் மீது ரூ.16 லட்சம் பணமோசடி புகார்!
புதன் 2, ஜூலை 2025 4:27:26 PM (IST)

பாமகவில் இருந்து அருள் எம்.எல்.ஏ. நீக்கம் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
புதன் 2, ஜூலை 2025 12:48:55 PM (IST)

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமார் சகோதரருக்கு அரசு வேலை!!
புதன் 2, ஜூலை 2025 12:41:25 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

பரமக்குடி – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை திட்டம் : எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
புதன் 2, ஜூலை 2025 10:47:05 AM (IST)
