» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு வேலைக்காக காத்திருப்போா் 53.74 லட்சம் : மாற்றுத்திறனாளிகள் 1.49 லட்சம்!!

புதன் 8, மே 2024 12:31:38 PM (IST)

கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி, அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 53 லட்சத்து 74 ஆயிரத்து 116 -ஆக உள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட தகவல்: அரசு வேலைக்காக பதிவு செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்போரின் எண்ணிக்கையை அவ்வப்போது தமிழக அரசு வெளியிடும். அதன்படி, கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 53 லட்சத்து 74 ஆயிரத்து 116. அதில், ஆண்கள் 24 லட்சத்து 74 ஆயிரத்து 985. பெண்கள் 28 லட்சத்து 98 ஆயிரத்து 847. மூன்றாம் பாலினத்தனவா் 284 என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 10 லட்சத்து 69 ஆயிரத்து 609 பேர். 19 முதல் 30 வயதுவரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 23 லட்சத்து 63 ஆயிரத்து 129 பேர். 31 முதல் 45 வயது வரை உள்ள அரசுப்பணி வேண்டி காத்திருப்போர் 16 லட்சத்து 94 ஆயிரத்து 518 பேர். 46 வயது முதல் 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2 லட்சத்து 40 ஆயிரத்து 537 பேர். 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 7 ஆயிரத்து 323 பேர்.

மாற்றுத்திறனாளிப் பதிவுத்தாரர்கள் விவரம்:

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளின் எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்து 803 பேர். அதில், கை,கால் குறைபாடுடையோரில் ஆண்கள் 76 ஆயிரத்து 260 பேர். பெண்கள் 39 ஆயிரத்து 222.

காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோரில் ஆண்கள் 9 ஆயிரத்து 586 பேர். பெண்கள் 4 ஆயிரத்து 582 பேர். பார்வையற்றோர் ஆண்கள் 12 ஆயிரத்து 567 பேர். பெண்கள் 5 ஆயிரத்து 766 பேர். அறிதிறன் குறைபாடு மற்றும் இதர குறைபாடுடையோர்களில் ஆண்கள் 1 ஆயிரத்து 375 பேர். பெண்கள் 445 பேர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory