» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆலங்குடி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

வியாழன் 2, மே 2024 8:52:01 AM (IST)



ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் அமைந்து உள்ளது. சோழ வள நாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரிக்கு தென் கரையில் உள்ள 127 தலங்களில் 98-வது தலமாக இந்த கோவில் விளங்குகிறது.

பாற்கடலை கடைந்தபோது ஏற்பட்ட ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றியதால் இத்தல இறைவனுக்கு ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. நேற்று மாலை 5.19 மணிக்கு குருபகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததையொட்டி இந்த கோவிலில் உள்ள குருபகவானுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. குருப்பெயர்ச்சி நடந்த நேரத்தில் குருபகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டபோது கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மிகுந்த பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

குருப்பெயர்ச்சியின்போது ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்களும் குருபகவானை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி 2-வது கட்ட லட்சார்ச்சனை வருகிற 6-ந்் தேதி(திங்கட்கிழமை) தொடங்கி 12-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மீண்டும் மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் லட்சார்ச்சனை நடக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory