» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெற்ற தாயை கொடூரமாக குத்தி கொலை செய்த மகன் : தூத்துக்குடியில் பயங்கரம்!

புதன் 24, ஏப்ரல் 2024 9:59:53 AM (IST)

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் பெற்ற தாயை மகன் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மட்டக்கடை வடக்கு பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஞானதீபம் மனைவி குடோடிடல்டா(66). கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இவர்களுக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களது 3வது மகனான ஜெயின், அதே பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

ஜெயின், அடிக்கடி தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு தாய் குடோடில்டா தனியாக வீட்டில் இருந்தபோது மது போதையில் சென்ற ஜெயின் தனது தாயுடன் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதில், ஜெயின் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குடோடில்டாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த குடோடில்டா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்து வடபாகம் வடபாகம் காவல் நிலைய  இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தப்பியோடிய ஜெயினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி செல்சினி காலனியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மது போதையில் தகராறு செய்த தந்தையை 15 வயது சிறுவன் வெட்டிக் காெலை செய்தார். இந்நிலையில பெற்ற தாயை மது போதையில் மகன் குத்திக் கொலை செய்துள்ளார். தூத்துக்குடியில் தொடர் கொலை சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

கடவுளுக்கு வெளிச்சம்Apr 24, 2024 - 06:13:41 PM | Posted IP 172.7*****

திராவிட அரசு டாஸ்மாக்கால் எத்தனை உயிர்கள் சத்தமில்லாமல் மடிகிறது

JAIHINDApr 24, 2024 - 04:19:00 PM | Posted IP 162.1*****

தமிழ்நாட்டில் குற்றங்கள் மிகவும் அதிகரித்துவிட்டது. மதுக்கடைகளை மூடினால்தான் இதை தவிர்க முடியும்.

R sureshApr 24, 2024 - 10:11:59 AM | Posted IP 162.1*****

குடிக்க வைத்து கொலை செய்ய தூண்டும் திராவிட மாடல்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory