» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மெகா ரங்கோலி: ஆட்சியர் பார்வையிட்டார்!

திங்கள் 8, ஏப்ரல் 2024 5:08:36 PM (IST)



திருநெல்வேலி தொகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் நடத்திய மெகா ரங்கோலி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பார்வையிட்டார். 

திருநெல்வேலி மக்களவை பொதுத்தேர்தல் 2024-நடைபெறுவதையொட்டி, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடுக்கல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் இணைந்து வரைந்த தேர்தல் விழிப்புணர்வு மெகா ரங்கோலி கோலங்களை தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், பாளையங்கோட்டை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் / திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், ஆகியோர் பார்வையிட்டார்கள்.

திருநெல்வேலி மக்களவை பொதுத்தேர்தல் 2024 நடைபெறுவதையொட்டி, மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் இணைந்து சுமார் 20,000 தேர்தல் விழிப்புணர்வு கோலங்கள் (ரங்கோலி ) வரையும் மெகா ரங்கோலி நிகழ்ச்சி நடைபெற்றது. மேலப்பாட்டம், காருக்குறிச்சி, மன்னார்கோவில், இடையன்குடி மற்றும் நடுக்கல்லூர் ஆகிய இடங்களில் சிறப்பு நிகழ்வாக ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான கோலங்கள் வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனடிப்படையில், நடுக்கல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வரையப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கோலங்களை தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் பார்வையிட்டார்கள்.

தொடர்ந்து, தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் தொடங்கி வைத்து, வாக்களாளர் உறுதிமொழியினை அனைவரும் எடுத்துக்கொண்டார்கள். மேலும், மேலப்பாட்டம், காருக்குறிச்சி, மன்னார்கோவில், இடையன்குடி ஆகிய இடங்களில் சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டு, சிறப்பித்தனர்.

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) இலக்குவன், உதவி திட்ட அலுவலர் ஜெயக்குமார், வட்டாட்சியர்கள் ஜெயலெட்சுமி, (திருநெல்வேலி), முருகன் (மானூர்), செல்வன் (பேரிடர் மேலாண்மை), வருவாய் ஆய்வாளர்கள் லட்சுமண பாண்டியன், பழனிக்குமார் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory