» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு

திங்கள் 8, ஏப்ரல் 2024 3:49:21 PM (IST)

தேர்தல் விதிகளை மீறியதாக திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி தொகுதியில் பா.ஜ., சார்பில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் நயினார் நாகேந்திரன் உட்பட அவரது ஆதரவாளர்கள் 25 பேர் மீது தேர்தல் விதிகளை மீறி பிரசாரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததால் இந்த வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை அதிகாரி தினேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory