» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சார வாகனம் மீது தாக்குதல் :2பேர் காயம்

திங்கள் 8, ஏப்ரல் 2024 12:46:25 PM (IST)



சங்கரன்கோவில் அருகே தென்காசி தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமியின் பிரச்சார வாகனம் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தென்காசி பாராளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக  புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.  இவருக்கு ஆதரவு கேட்டு தொகுதி முழுவதும் பிரச்சார வாகனங்கள் சென்று வருகின்றன.  

இந்நிலையில் நேற்று இரவு  சங்கரன் கோவில் அருகே தெற்கு புதூர் பகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமியின் பிரச்சார ஆட்டோ சென்றுள்ளது.  அந்த ஆட்டோவை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தி ஊருக்குள் வரக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.  மேலும் ஆட்டோ மீது மீது கல்வீசி தாக்கப்பட்டுள்ளது. 

இதில் ஆட்டோவில் இருந்த வடநத்தம்பட்டி மணிகண்டன், ராமசாமிபுரம் மகேஷ் இருவரும் கல்வீச்சில் காயமடைந்துள்ளனர். இது பற்றி சங்கரன்கோவில் தாலுகா போலீசில் அடையாளம் தெரியாத மூன்று பேர் கல்வீசி தாக்கியதாக  புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தெற்கு புதூர் பகுதிக்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory