» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ராஜீவ் கொலை வழக்கு: முருகன் உள்ளிட்ட மூவர் இலங்கை புறப்பட்டனர்!

புதன் 3, ஏப்ரல் 2024 11:43:29 AM (IST)



ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை புறப்பட்டுச் சென்றனர்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டு திருச்சி முகாமில் முருகன், ஜெயக்குமாா், ராபா்ட் பயஸ் ஆகியோர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இதற்கிடையே, தனது மகளுடன் லண்டனில் வசிக்கப் போவதாகவும், அதற்கு விசா எடுக்க புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கக் கோரி முருகன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது, முருகன், ஜெயக்குமாா், ராபா்ட் பயஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் தரப்பில் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுவிட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இவர்கள் மூவரும் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து, திருச்சி முகாமில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் மூவரும் நேற்றிரவு சென்னை அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு கொழும்பு செல்லும் விமானம் மூலம் மூவரையும் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory