» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேர்தலில் போட்டியிடாதது தமிழ்நாட்டை காக்கும் வியூகம் : கமல்ஹாசன் பேச்சு

சனி 30, மார்ச் 2024 8:58:02 AM (IST)



தேர்தலில் போட்டியிடாதது தமிழ்நாட்டை காக்கும் வியூகம் என்று ஈரோட்டில் பிரசாரம் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அவர் நேற்று ஈரோட்டில் தனது பிரசாரத்தை தொடங்கினார். ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், நாமக்கல் மாவட்டம் வெப்படை ஆகிய பகுதிகளில் தி.மு.க. வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு திறந்த வேனில் நின்றபடியே பிரசாரம் செய்தார். 

முன்னதாக வீரப்பன்சத்திரத்தில் அவர் பேசியதாவது: என்னிடம் பலரும் நான் போட்டியிடாமல் தியாகம் செய்துவிட்டதாக கூறுகிறார்கள். இது தியாகம் அல்ல. வியூகம். தமிழ்நாட்டை காக்கும் வியூகம். காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம், எம்.ஜி.ஆரால் தொடரப்பட்டு இன்று நீட்சியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் காலை உணவு திட்டமாக நிகழ்த்தப்படுகிறது. இங்கே உள்ள திட்டங்கள் அனைத்தும் மக்களின் உழைப்பால் மட்டும் வந்தது.

தமிழ்நாட்டுக்கு வட மாநிலங்களில் இருந்து ஏராளமாக தொழிலாளர்கள் வருகிறார்கள். அதற்கு காரணம் அங்கு வேலையில்லை. இங்கே தான் வேலைவாய்ப்பு இருக்கிறது. நாம் வரியாக கொடுக்கும் 1 ரூபாயில் நமக்கு 29 காசுதான் திருப்பி தருகிறார்கள். அதே நேரம் வடமாநிலமான பீகாருக்கு ரூ.7 கிடைக்கிறது. ஆனால், அங்கிருந்து கூலி வேலைக்கு மக்கள் இங்கே வருகிறார்கள்.

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம், பேச்சின் இடையே காக்கா கடிபோல் தமிழில் பேசினால் தமிழ்நாட்டு மக்கள் மொத்தமாக ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறார். ஆகாயத்தாமரை மலர்ந்தால் நதி கெட்டுவிடும். தாமரை மலர்ந்தால் நாடு கெட்டுவிடும்.

நான் பதவிக்காக வாக்கு கேட்டு வரவில்லை. நாடு காக்க வந்திருக்கிறேன். திராவிட கூட்டம் இது, தேசிய நீரோட்டத்தில் சேராது என்கிறார்கள். வடநாட்டில் எங்காவது கட்டபொம்மன், சிதம்பரம், காமராஜர் என்று பெயர் இருந்தால் காட்டுங்கள். நமது தமிழ்நாட்டில் காந்தி, நேரு, போஸ், பட்டேல் என்று எந்த கிராமத்துக்கு சென்றாலும் ஒருவர் இருப்பார்.

எப்படியாவது நாட்டைப்பிடிக்க வேண்டும் என்று வருகிறார்கள். நாடு பிடிப்பது அல்ல, நாடு காப்பதுதான் வீரம். உண்மையை, தைரியமாக பளிச்சென்று பேசிவிட வேண்டும் என்று கற்றுத்தந்தவர் ஈரோட்டு பெரியார். கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து விடுதலை பெற்றோம். இப்போது குஜராத்தில் இருந்து மேற்கு இந்திய கம்பெனியின் பிடிக்குள் இருக்கிறோம்.

கவர்னர் மூலமும், இந்தி திணிப்பு மூலமும் மத்திய அரசு நம் மீது கை வைக்கிறது. அவர்கள் கை வைத்தால் நாம் விரலில் மை வைப்போம். உங்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க உதயசூரியனுக்கு வாக்களிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து

எவன்Mar 30, 2024 - 09:46:42 PM | Posted IP 162.1*****

முட்டாள்கள்

RamsubbuMar 30, 2024 - 01:02:22 PM | Posted IP 172.7*****

SEMA COMMEDY

ComedyMar 30, 2024 - 11:07:35 AM | Posted IP 162.1*****

Sema comedy.....

ComedyMar 30, 2024 - 11:06:22 AM | Posted IP 162.1*****

Sema comedy.....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory