» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காசு கொடுத்து ஓட்டு வாங்கும் அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை : கனிமொழி எம்.பி. பேட்டி

சனி 30, மார்ச் 2024 8:54:37 AM (IST)

நலத்திட்டங்களை நம்பிதான் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். காசு கொடுத்து ஓட்டு வாங்கும் அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை என்று கோவையில் கனிமொழி எம்.பி. கூறினார்.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்ய தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று கோவை வந்தார். அவர் பேட்டியின்போது கூறியதாவது: கோவை மக்கள் எனக்கு கொடுத்த வரவேற்பை வைத்து பார்க்கும்போது தி.மு.க. வேட்பாளர் கண்டிப்பாக வெற்றி பெறுவார். எனவே 2-வது இடத்துக்கு யார் வருவார் என்பதில்தான் போட்டி அதிகமாக இருக்கும். தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் மக்களிடையே சென்றடைந்து இருக்கிறது.

மக்கள் தி.மு.க.வுக்கு கண்டிப்பாக வாக்களிப்பார்கள். பா.ஜனதா எந்த பொறுப்புக்கும் வந்துவிடக்கூடாது என்று மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எனவே தமிழகம்-புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும். தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை 1 கோடியே 15 லட்சம் பெண்கள் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் நடந்த மோசடியை போன்று தி.மு.க. கொண்டு வந்த திட்டங்கள் கிடையாது. தமிழக அரசின் காலை உணவு திட்டம் சிறப்பான வரவேற்பை பெற்று இருக்கிறது. எனவே பெயரளவில் திட்டங்கள் இருக்கிறது என்று சொல்வதை ஏற்க முடியாது.

போதைப்பொருள் விவகாரத்தை பொறுத்தவரை, அதை கட்டுப்படுத்தும் துறை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எனவே போதைப்பொருட்கள் அதிகம் இருப்பதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அதை தடுக்க மத்திய அரசுக்கு உதவ மாநில அரசு தயாராக இருக்கிறது.

குஜராத்தில் உள்ள ஒரு துறைமுகத்தில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த துறைமுகம் யாருடையது என்று அனைவருக்கும் தெரியும். அதன் பின்னர் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. அந்த விசாரணையை மூடி மறைத்துவிட்டார்களா என்பதும் தெரியவில்லை.

கோவையில் போட்டியிடும் அண்ணாமலை, 60 சதவீதம் இல்லை, 90 சதவீதம் ஓட்டுகள் கூட வாங்கலாம் என்று கனவு காண்பது அவருடைய உரிமை. ஆனால் வெற்றி பெறுவது தி.மு.க.தான். ஓட்டுக்கு ஒரு பைசா கூட செலவழிக்க மாட்டேன் என்று அண்ணாமலை கூறுகிறார். பின்னர் ஏன் அத்தனை கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கினார். நாங்கள் யாருக்கும் காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் இல்லை. முதல்-அமைச்சரின் நலத்திட்டங்களை நம்பிதான் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

ஓட்டு போட்ட முட்டாள்Mar 30, 2024 - 09:45:29 PM | Posted IP 162.1*****

சாராய ஆலய கம்பெனி திருட்டு குடும்பம்.

NambitomMar 30, 2024 - 11:06:56 AM | Posted IP 162.1*****

Nambitom...

TAMILARKALSMar 30, 2024 - 10:32:38 AM | Posted IP 172.7*****

38 MP க்கள் தமிழ்நாட்டிற்கு செய்த நல்ல விஷயங்களை பட்டியலிடுங்கள்......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory