» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக அரசின் சாதனைகளால் வெற்றி வாய்ப்பு உறுதி : வேட்புமனு தாக்கலுக்கு பின் கனிமொழி பேட்டி!

செவ்வாய் 26, மார்ச் 2024 12:19:12 PM (IST)



திமுக அரசின் சாதனைகளால் தூத்துக்குடி தொகுதியில் தனது வெற்றி உறுதி ஆகிவிட்டது என்று வேட்புமனு தாக்கலுக்கு பின் திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்தார். 

வருகிற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக 2ஆவது முறையாக கனிமொழி போட்டியிடுகிறார். இவர் இன்று காலை தனது வேட்பு மனுவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் அதிகாரியுமான லட்சுமிபதியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக திமுக வேட்பாளர் கனிமொழி, தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பு உள்ள கலைஞர் கருணாநிதி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். 

இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ஜிவி மார்க்கண்டேயன், சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ், காங்கிரஸ் மாநகர செயலாளர் முரளிதரன், மதிமுக மாநகர செயலாளர் முருக பூபதி, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் கீதர் பிஸ்மி, இந்திய யூனியன் முஸ்லிம லீக் கட்சி மாவட்ட தலைவர் மீராசா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அகமது இக்பால், திமுக மாவட்ட துணை செயலாளர் ராஜ்குமார் செல்வின், ஆறுமுகம், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் மாநகராட்சி, துணை மேயர் ஜெனிட்டா,  உள்பட திமுக மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி "மீண்டும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி. சென்ற இடமெல்லாம் மக்கள் ஆர்வமும்  திமுக அரசு  சாதனைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் தான் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. அமைச்சர்கள் மக்கள் பிரதிநிதிகள் மேயர் ஆகியோர் நல்ல உழைப்பதால் தாங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது மக்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டார்கள் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory