» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரதமர் மோடியின் விருப்பத்தினாலேயே கோவையில் போட்டி: அண்ணாமலை பேட்டி!

சனி 23, மார்ச் 2024 12:16:23 PM (IST)



பிரதமர் மோடியின் விருப்பத்தினாலேயே கோவையில் போட்டியிடுகிறேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: தமிழ்நாடு அரசியல் தான் எனக்கு முக்கியம்; டெல்லி அரசியலில் விருப்பம் இல்லை. பிரதமர் மோடியின் உத்தரவை மதித்து நடப்பவன் நான். பிரதமர் மோடியின் விருப்பத்தினாலேயே கோவை தொகுதியில் போட்டியிடுகிறேன்.

நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பா.ஜ.க. வெல்லும். தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையிலிருந்து ஆரம்பமாக வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 40 நாட்கள் தங்கி இருந்து பரப்புரை செய்தாலும் கோவையில் பா.ஜ.க. தான் வெல்லும். 2026-ல் ஆட்சி அமைக்கவே பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory