» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண்ணிடம் செயின் பறித்த 2 பேர் கைது: ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை மீட்பு; பைக் பறிமுதல்!

சனி 16, மார்ச் 2024 8:57:16 PM (IST)

ஆழ்வார்திருநகரி அருகே பெண்ணிடம் செயின் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து, சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள செயின் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பால்குளம் பகுதியைச் சேர்ந்த சிவந்தி மகன் ராமச்சந்திரன் (85) என்பவர் பெட்டி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 13.03.2024 அன்று ராமச்சந்திரன் மற்றும்  அவரது மனைவியுடன் கடையில் இருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் தண்ணீர் பாட்டில் வாங்குவது போல வந்து ராமச்சந்திரனின் மனைவி அணிந்திருந்த 6½ சவரன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எல். பாலாஜி சரவணன்  உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  மாயவன் மேற்பார்வையில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு)  ரசிதா தலைமையில் உதவி ஆய்வாளர்  செல்வன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

அதில் ஆழ்வார்திருநகரி மாதாங்கோயில் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாரிமுத்து (29) மற்றும் தூத்துக்குடி பேரூரணி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரிக்கண்ணன் (23) ஆகிய 2 பேரும் சேர்ந்து ராமச்சந்திரனின் மனைவியிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.  இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள 6½ சவரன் தங்க நகை மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் இதுகுறித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகை பறித்தவர்களை கைது செய்து திருடப்பட்ட நகை மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory