» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் ஏப்.19இல் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை!

சனி 16, மார்ச் 2024 3:59:34 PM (IST)

தமிழ்நாட்டில் 2024 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்தார்

நடப்பு 17-ஆவது மக்களவையின் பதவிக் காலம் வரும் ஜூன் 16-ஆம் தேதி நிறைவடைகிறது. அதற்கு முன்பாக, 18-ஆவது மக்களவை தோ்வு செய்யப்பட வேண்டும். இதற்கான தோ்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறுமென எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், தில்லியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்ற றும் பத்திரிகையாளா் சந்திப்பில் மக்களவைத் தோ்தல் மற்றும் 4 மாநில பேரவைத் தோ்தல்களுக்கான அட்டவணை மற்றும் தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.இந்த நிலையில் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 20 முதல் ஏப்ரல் 27 வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory