» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவையில் பிரதமர் மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி மறுப்பு: காவல்துறை விளக்கம்!

வெள்ளி 15, மார்ச் 2024 4:51:51 PM (IST)

பாதுகாப்பு காரணங்களால் பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

மக்களவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி, பாஜகவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பல்வேறு மாநிலங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பிதாரிலிருந்து கோவைக்கு மார்ச் 18 ஆம் தேதி பிரதமர் வருகிறார். அன்று கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் இருந்து ஆர்.எஸ். புரம் வரை நடைபெறும் வாகனப் பிரசாரத்தில் பங்கேற்கிறார்.

இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களால் பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆர்.எஸ். புரம் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory