» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: முன்னாள் டிஜிபிக்கு லுக்-அவுட் நோட்டீஸ்!!

திங்கள் 11, மார்ச் 2024 11:09:52 AM (IST)

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை எதிர்த்து ராஜேஷ் தாஸ் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் தலைமறைவானார். மார்ச் 9ஆம் தேதி அவரை கைது செய்ய காவல்துறையினர் சென்னை தையூர் கோமநகர் பகுதியில் உள்ள வீட்டுக்கச் சென்றபோதுதான், அவர் தலைமறைவானது தெரிய வந்தது. இதையடுத்து அவர் தலைமறைவாக உள்ளதால், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக லுவ் -அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் ராஜேஷ் தாஸுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்திருந்தது.

இந்த தண்டனையை எதிா்த்து ராஜேஷ்தாஸ் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா்.இந்தத் தீா்ப்பை எதிா்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஜன.6-ஆம் தேதி தீா்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதற்கிடையில், விழுப்புரம் முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணையை, வேறு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையிலிருந்ததால் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் தீா்ப்பும் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு, சென்னை உயா் நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரும் காரணம் போதுமானதாக இல்லை. அதற்கு அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லை’ என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தாா்.

மேலும், மேல்முறையீட்டு வழக்கின் விசாரணைக்காக ஜன. 12-ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ராஜேஷ் தாஸுக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஜன. 18-ஆம் தேதி இறுதி விசாரணையைத் தொடங்கி ஜன. 24-க்குள் முடிக்க வேண்டும் என விழுப்புரம் முதன்மை அமா்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து பல்வேறு கட்டங்களைக் கடந்து, சரணடைய போதிய அவகாசம் வேண்டும் என்று ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடியான நிலையில், அவர் தலைமறைவானது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory