» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சொத்து வரி ரூ.10.37 கோடி பாக்கி: மத்திய அரசு அலுவலகத்திற்கு மாநகராட்சி நோட்டீஸ்!

புதன் 6, மார்ச் 2024 12:13:29 PM (IST)

சென்னையில் ரூ.10.37 கோடி சொத்து வரி பாக்கி வைத்துள்ள மத்திய
அரசு அலுவலகத்திற்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. .

சொத்து வரி பாக்கி வைத்துள்ள கட்டடங்கள் மீது, சென்னை மாநகராட்சி வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான போர்ட் டிரஸ்ட் வரி பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. வரி பாக்கி குறித்து பல முறை தகவல் தெரிவித்தும் இன்னும் அந்த தொகை செலுத்தப்படவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், நிலுவையில் உள்ள ரூ.10.37 கோடி சொத்து வரியை செலுத்தவில்லை என்பதால், மத்திய அரசு அலுவலகமான போர்ட் டிரஸ்டுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. குறிப்பிட்ட அவகாசத்திற்குள் வரி செலுத்தவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரி பாக்கி தொகை செலுத்தவில்லை எனில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதேபோல், சொத்து வரி செலுத்தாத மற்ற நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory