» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி!!

புதன் 6, மார்ச் 2024 11:47:51 AM (IST)



நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி இணைந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை பொறுத்தமட்டில் பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியும் அ.தி.மு.க. அணியில் இணைந்துள்ளது. ஏற்கனவே அந்த அணியில் எஸ்.டி.பி.ஐ. மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் உள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி இணைந்துள்ளது. சென்னை கிரீன்வேஸ்சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கதிரவன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து இரு கட்சிகளும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கு தேனி, ராமநாதபுரத்தில் ஏதேனும் ஒரு தொகுதியை வழங்க வேண்டும் என அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory