» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை: போலி டாக்டர் கைது

புதன் 6, மார்ச் 2024 8:22:22 AM (IST)

திசையன்விளையில் மருத்துவ படிப்பு படிக்காமல் சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (76). இவர் திசையன்விளை- உடன்குடி ரோடு மன்னர் ராஜா கோவில் எதிரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். ஆனால் இவர் மருத்துவ படிப்பு படிக்காமல் ஆங்கில மருத்துவத்திற்கு சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த நெல்லை மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் லதா திசையன்விளை போலீசில் புகார் அளித்தார். 

இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் செல்வராஜ், மருத்துவ படிப்பு படிக்காமல் சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் செல்வராஜை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory