» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது; மக்கள் பதற்றம் அடைய தேவையில்லை: தமிழ்நாடு அரசு
வியாழன் 7, டிசம்பர் 2023 12:25:17 PM (IST)
புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது. மக்கள் எந்த விதத்திலும் பதற்றம் அடைய தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மிக முக்கியமான ஏரியாகும். இந்த ஏரியானது திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர் பரப்பு பகுதி 20.27 ச.கி.மீட்டர் ஆகும். இந்த ஏரியின் முழு உயரம் 2,120 அடியாகும். இந்த ஏரியின் முழு கொள்ளளவு 3,300 மி.க. அடியாகும். ஏரியின் கரையின் நீளம் 7,090 மீட்டர் ஆகும்.
இன்றைய நிலவரப்படி 20.00 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் கொள்ளளவு 3,012 மி.க. அடியாக உள்ளது. மேலும் இன்று காலை 6.00 மணி நிலவரப்படி, புழல் ஏரியின் நீர்வரத்தானது 550 கனஅடியாக உள்ளது. தற்போது ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கனஅடி விதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக மிக்ஜம் புயலினால் அதிக அளவு கன மழை பெய்ததினால் ஏரிக்கு நீர்வரத்து கூடுதலாக வந்து கொண்டிருந்ததால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்த நிலையில் ஏரியில் இருந்து ரெகுலேட்டர் வழியாக உபரி நீர் வினாடிக்கு 5500 கன அடி வெளியேற்றப்பட்டு வந்தது.
அப்போது ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றினால் ஏரியில் மிக கடுமையான அளவில் அலைகள் ஏற்பட்டு கலங்களின் மேல் தண்ணீர் வெளியேறியது, இதனால் காவல்துறை பாதுகாப்பு அறை பின் பகுதியில் கரையில் உள்ள பக்கவாட்டு தாங்கு சுவரின் பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த கருங்கல்லால் ஆன சுற்றுசுவர் சரிந்து மண் அரிப்பு ஏற்பட்டது.
இது ஏரியின் 2 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, இதன் வழியாக தண்ணீர் வெளியேறவில்லை, மேலும் கலங்கல் வழியாக அலைகளால் தண்ணீர் வெளியேறியதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. தற்போது மண் அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில் மண் கொட்டி மட்டப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது. புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளது. எனவே மக்கள் எந்த விதத்திலும் பதற்றம் அடைய தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தனியாா் மினி பஸ்களை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி: ஜூன் 15 முதல் அமல்
ஞாயிறு 11, மே 2025 11:51:14 AM (IST)

இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி
ஞாயிறு 11, மே 2025 10:37:49 AM (IST)

அரசு மாதிரிப் பள்ளியில் ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு
சனி 10, மே 2025 8:21:06 PM (IST)

தேசிய சராசரியைவிட தமிழகத்தில் கல்வித் தரம் சிறப்பாக உள்ளது : மாநில திட்டக் குழு தகவல்
சனி 10, மே 2025 5:51:33 PM (IST)

ஆம்புலன்ஸ் பணிகளுக்கு மே 12ல் ஆட்கள் தேர்வு முகாம்: ஆட்சியர் தகவல்
சனி 10, மே 2025 4:47:43 PM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)
