» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் கடும் பனிமூட்டம் : விமான சேவைகள் பாதிப்பு

வியாழன் 7, டிசம்பர் 2023 11:27:04 AM (IST)

சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் விமான சேவை பாதிக்கப்பட்டது. பல விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஆனது. 

சென்னையில் 'மிக்ஜம்' புயலால் கடந்த ஞாயிறு இரவு முதல் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை விமான சேவை பாதிக்கப்பட்டது. நேற்று பயணிகளின் எண்ணிக்கை குறைவு மற்றும் விமானிகள் பணிக்கு வராத காரணத்தால் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் வில்லிவாக்கம், அயனாவரம், எழும்பூர், நுங்கம்பாக்கம், ஐயப்பாக்கம், போரூர், கிண்டி, மீனம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானத்திலேயே வட்டமிடும் சூழல் ஏற்பட்டது. அதேபோல், சென்னையில் இருந்து மதுரை, கோவை, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் விமானங்களும் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory