» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நடிகர் ரஜினிகாந்த் கோவை வருகை: விமான நிலையத்தில் திரண்ட ரசிகர்கள் கூட்டம்!
ஞாயிறு 17, செப்டம்பர் 2023 7:23:55 PM (IST)

சூலூரில் நடைபெறும் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்த நடிகர் ரஜினிகாந்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நடிகர் ரஜினி காந்த் சூலூரில் நடைபெற உள்ள தனது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மனைவி லதாவுடன் கோவை வந்தடைந்தார். நடிகர் ரஜினிகாந்த் வருவதை அறிந்த அவரது ரசிகர்கள் விமான நிலையம் முன்பாக கூடியிருந்தனர். சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு சரியாக 11.30 மணிக்கு வெளியே வந்த அவரை, ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நடிகர் ரஜினி காந்த் பதிலளிக்க தயாரான நிலையில், கூட்ட நெரிசலால் அவரால் சரிவர பதிலளிக்க முடியவில்லை. ஓரிரு வார்த்தைகளாக தனது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோவை வந்துள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார். இதனையடுத்து காரின் மேல் நின்றவாறு ரசிகர்களுக்கு கையசைத்து அங்கிருந்து விடை பெற்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் மாநில பகுஜன் சமாஜ்: புதிய அரசியல் கட்சி தொடங்கினார் ஆம்ஸ்ட்ராங் மனைவி..!!
ஞாயிறு 6, ஜூலை 2025 11:11:26 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து அதிகரிப்பு, விலை குறைந்தது: பொதுமக்கள் மகிழ்ச்சி!!
ஞாயிறு 6, ஜூலை 2025 10:00:11 AM (IST)

திருச்செந்தூர் கோவில் பாதுகாப்பில் 360 டிகிரி கேமரா ஜிபிஎஸ் வாகனங்கள்: ஏடிஜிபி துவக்கி வைத்தார்
சனி 5, ஜூலை 2025 8:00:37 PM (IST)

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்!
சனி 5, ஜூலை 2025 5:15:49 PM (IST)

விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ. 5 இலட்சம் வரை கடன் உதவி : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
சனி 5, ஜூலை 2025 4:39:34 PM (IST)
