» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் வாகனம் மோதி ரவுடி பரிதாப பலி: போலீசார் தீவிர விசாரணை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 10:36:15 AM (IST)
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், 10-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் சூசை நகரைச் சேர்ந்தவர் சங்கர் ராஜ். இவரது மகன் புகழேந்தி (26). இவர் மீது முத்தையாபுரம் காவல் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இவர் அப்பகுதியின் பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார்.
நேற்று இரவு முழுவதும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் புகழேந்தி, இன்று அதிகாலை முத்தையாபுரத்தில் இருந்து புதிய துறைமுகம் செல்லும் பிரதான சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக துறைமுகத்தை நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
விபத்தில் பலத்த காயமடைந்த புகழேந்தியை அப்பகுதியினர் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது என்பதைக் கண்டறிய, விபத்து நடந்த பிரதான பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:04:00 PM (IST)

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)

பார்வதிபுரம் – ஆசாரிப்பள்ளம் சாலையில் ராட்சத பள்ளம்: அதிகரிக்கும் வாகன விபத்துகள்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:01:38 PM (IST)

கன்னியாகுமரி எஸ்.பி. மீது அவதூறு : சவுக்கு சங்கருக்கு ஆதித்தமிழர் கட்சி கடும் கண்டனம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 3:19:18 PM (IST)



ரவுடி தானேAug 26, 2026 - 10:33:12 AM | Posted IP 172.7*****