» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் விபத்தில் ஜிம் பயிற்சியாளர் பரிதாப பலி
சனி 22, ஆகஸ்ட் 2026 9:47:50 PM (IST)
தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் நடைபெற்ற விபத்தில், ஜிம் பயிற்சியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி பொன் சுப்பையா நகரைச் சேர்ந்தவர் செல்வநாயகம். இவரது மகன் இளையராஜா (21). இவர் ஜிம் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார். இளையராஜா இன்று மாலை 8 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் பாளையங்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார்.
எஃப்.சி.ஐ குடோன் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இளையராஜா விபத்தின் போது தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தார். எனவே, அவர் உண்மையில் நிலைதடுமாறி தான் கீழே விழுந்தாரா அல்லது பின்னாலிருந்து ஏதேனும் வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதா? என்ற கோணத்தில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
வாகன ஓட்டிAug 23, 2026 - 10:23:26 AM | Posted IP 162.1*****
அங்கு சாலையில் barricade எதற்கு ??? போக்குவரத்துக்கு நெரிசல் , காற்றில் சாலையில் மணல்கள் தேங்கி இருக்கிறது. கலெக்டர் ஆபீஸ் செல்லும் ரோட்டில் ஜல்லிக்கற்கள், 2 wheeler வாகனஓட்டிகளை கீழ விழ வைக்கும் ஆபத்தான speed breaker, அரைகுறை சாலைகளை என்னத்த சொல்ல??? சாலை பாதுகாப்பு எல்லாம் மூளையே இல்லாத தூத்துக்குடி மாநகராட்சி.
வாகன ஓட்டிAug 23, 2026 - 10:23:13 AM | Posted IP 162.1*****
அங்கு சாலையில் barricade எதற்கு ??? போக்குவரத்துக்கு நெரிசல் , காற்றில் சாலையில் மணல்கள் தேங்கி இருக்கிறது. கலெக்டர் ஆபீஸ் செல்லும் ரோட்டில் ஜல்லிக்கற்கள், 2 wheeler வாகனஓட்டிகளை கீழ விழ வைக்கும் ஆபத்தான speed breaker, அரைகுறை சாலைகளை என்னத்த சொல்ல??? சாலை பாதுகாப்பு எல்லாம் மூளையே இல்லாத தூத்துக்குடி மாநகராட்சி.
மேலும் தொடரும் செய்திகள்

பார்வதிபுரம் – ஆசாரிப்பள்ளம் சாலையில் ராட்சத பள்ளம்: அதிகரிக்கும் வாகன விபத்துகள்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 4:01:38 PM (IST)

கன்னியாகுமரி எஸ்.பி. மீது அவதூறு : சவுக்கு சங்கருக்கு ஆதித்தமிழர் கட்சி கடும் கண்டனம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 3:19:18 PM (IST)

தோழி பணிபுரியும் மகளிர் விடுதி கட்டடப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 12:53:26 PM (IST)

நாகர்கோவில் - கோட்டையம் இருமார்க்கங்களிலும் ரயில் இயக்க குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:06:13 PM (IST)

ஆசிரியர்கள் கண்டித்ததால் +1 மாணவர் தற்கொலை: மாணவர்கள் வகுப்புறக்கணிப்பு - சாலை மறியல்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 10:57:34 AM (IST)

திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் அறிவிப்பு: நாகர்கோவில் வழியாக இயக்கம்!
சனி 22, ஆகஸ்ட் 2026 3:42:08 PM (IST)



BabuAug 24, 2026 - 07:37:05 AM | Posted IP 104.2*****